ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் இருக்கை சர்ச்சை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் இருக்கை சர்ச்சை

உலக கோப்பை ஹாக்கி நிகழ்ச்சி

உலக கோப்பை ஹாக்கி நிகழ்ச்சி

அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் அமைச்சர் உதயநிதியிடம் அதிருப்தி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படாததால் சலசலப்பு ஏற்பட்டது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி ஒடிஷாவில் நடைபெறவுள்ள நிலையில் ஹாக்கி சாம்பியன் கோப்பையை அறிமுகம் செய்யும் விழா எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது, உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களுக்கு விழா மேடையில் இடம் வழங்கப்படாமல் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் அமைச்சர் உதயநிதியிடம் அதிருப்தி தெரிவித்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நியூஸ் 18 செய்தி எதிரொலி : பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற உறுதிச்சான்று தேவையில்லை

 அதன் பிறகு அவர்களுக்கு விழா மேடையின் முதல் வரிசையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என உறுதியளித்தார்.

First published:

Tags: Hockey, Udhayanidhi Stalin