முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன்... உதயநிதி!

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன்... உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhi stalin | இன்று முதலமைச்சர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி. பதவி பிரமாணம் செய்து வைக்க அதனை உதயநிதி ஸ்டாலின் ஏற்று கொண்டார்.

தொடர்ந்து, மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றதாகவும், அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல், பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Minister, MK Stalin, RN Ravi, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin