ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டு வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைந்துரையாடல்

விளையாட்டு வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைந்துரையாடல்

தமிழகத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வருகின்ற, 2023 ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் தங்க கோப்பை' போட்டிகள் தொடங்கவுள்ளதாக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையே நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் தமிழக விளையாட்டு வீரர்களிடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க: சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

First published:

Tags: Udhayanithi Satlin