ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செஸ் ஒலிம்பியாட் போல் சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி - உதயநிதி ஸ்டாலின் உறுதி

செஸ் ஒலிம்பியாட் போல் சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி - உதயநிதி ஸ்டாலின் உறுதி

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi stalin speech in TN assembly | சட்டப்பேரவையில் அமைச்சரான பின் முதன் முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின் திருப்பூரில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அவரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடி ரூபாய் மதிப்பில், கால்பந்து, உடற்பயிற்சி கூடம், தடகள ஓடுதள பாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்கும் பணி 60 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த மைதானத்தை தானே நேரில் வந்து திறந்து வைப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்திருப்பதாகவும், பாரம்பரிய விளையாட்டுகள் அடங்கிய கபடி மற்றும் சிலம்பம் போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் பதிலளித்தார்.

மேலும் பாரம்பரிய மிக்க உலக கோப்பை கபடி போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

First published:

Tags: DMK, Tamil News, TN Assembly, Udhayanidhi Stalin