கலைஞரின் பேரன், முதலமைச்சரின் மகன் என்பதை விட, தமிழ்நாட்டு மக்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதே பெருமை என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி , செந்தில் பாலாஜி மற்றும் எம்பி.-க்கள் பி.ஆர்.நடராஜன் , சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் 799 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 936 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் 229 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் 368 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்காத கோவையை சேர்ந்த அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏ-க்கள் 10 பேருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Udhayanithi Satlin