முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாரிசு அரசியலா? விமர்சனங்களுக்கு செயல்களால் பதிலளிப்பேன்.. அமைச்சர் உதயநிதி அதிரடி!

வாரிசு அரசியலா? விமர்சனங்களுக்கு செயல்களால் பதிலளிப்பேன்.. அமைச்சர் உதயநிதி அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Minister udhayanidhi stalin pressmeet | வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு செயல்களால் பதிலளிப்பேன் - அமைச்சர் உதயநிதி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு செயல்களால் பதில் சொல்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி என கூறினார்.விளையாடுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது அதில் என்ன செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே இலக்கு என கூறினார்.

மேலும், தற்போது நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என்றும், இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், வாரிசு அரசியல் என கூறுவதை தடுக்க முடியாது என்றும், விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகளால் பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: MK Stalin, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin