ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... அமைச்சர் உதயநிதி ட்வீட்!

சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... அமைச்சர் உதயநிதி ட்வீட்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் முதலமைச்சர் உரையின்போதே வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அரசு தயாரித்த உரைக்கு எதிராக ஆளுநர் பேசிய சொற்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்து அவையின் மாண்பை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் மக்கள் அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார்.

அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். இறுதியாக தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஆளுநர் முதலமைச்சர் உரையின்போதே வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த ட்வீட்டில்,  “தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, Udhayanidhi Stalin