அனைத்தும் முடங்கி இருக்கும் பொழுது மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத வேண்டுமா என்கிற கேள்வி உள்ளது என அரியர் மாணவர்கள் விவகாரத்தில் அமைச்சர் உதயகுமார் அவரது கருத்தை கூறியுள்ளார்.
மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பருவ மழையில் இருந்து விவசாயத்தை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. எதார்த்த நிலையில் அவர்கள் இல்லை. காலத்திற்கு ஏற்ப மக்களின் மனமறிந்து செயல்பட வேண்டும். எம்ஜிஆர் அதைத்தான் செய்தார்” என்றார்.
மேலும் “ ஆதிகாலத்தில் இருப்பதைப் போன்று மன நிலையில் திமுக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப வகையில் தங்களை தயார் படுத்துவதில் திமுக பின்தங்கியுள்ளது. காலத்தால் மங்கி போய் உள்ளது. 8 மாதத்தில் தேர்தல் நிச்சயம் வரும். வெற்றி எங்கள் உடையதாக இருக்கும். 5 மாதம் எந்த பணியும் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்” என கூறினார்.
மேலும் படிக்க...பெற்றோரின் மனநிலையை அறிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
”பிரதமர் மோடி முன்னுதாரண திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார். அவற்றை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறோம். யுஜிசி வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். மாணவர் நலன் சார்ந்து விருப்பம் சார்ந்து அனைத்தும் முடங்கிப் போயிருக்கும் நிலையில் மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத வேண்டுமா என்கிற கேள்வி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது நீதியரசர்கள் வழிகாட்டுதல் படி முடிவு செய்யப்படும்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Minister udhayakumar