Home /News /tamil-nadu /

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மரபு சார்ந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மரபு சார்ந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில், மரபு சார்ந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முன்வந்துள்ள நிலையில், நிதி பங்களிப்பு, இட ஒதுக்கீடு ஆகிய காரணங்களைக் காட்டி அதனை ஏற்பதற்கு தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.

    இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ”அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு ’உயர் சிறப்பு அந்தஸ்து’ என்று கூறிவிட்டு, மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய பாஜக அரசு இன்றுவரை மறுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.



    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், உரிமைகளை பாதிக்காத வண்ணம் வளர்ச்சியைப் பெற வேண்டுமென்று கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜனநாயக ரீதியில், மரபு சார்ந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Anna University

    அடுத்த செய்தி