Home /News /tamil-nadu /

காற்றுமாசு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

காற்றுமாசு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார்.

அமைச்சர் உதயகுமார்.

  • News18
  • Last Updated :
    சென்னையில் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை காற்று மாசு தொடர்பாக, மேலாண்மைத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ஒரு சில இடங்களில் காற்று மாசு இருப்பதாகவும், அதற்காக மக்கள் அச்சமோ, பீதியோ அடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

    சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசிற்கு கடற்காற்று எதிர்பார்த்த அளவிற்கு வீசாதது ஒரு காரணமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குப்பைகளை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அமைச்சர், கட்டடப் பணிகள், நடைபெறும் இடங்களில் தூசுகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    காற்று மாசு காரணமாக, இதுவரை சுவாசப் பிரச்னை எதுவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Air pollution

    அடுத்த செய்தி