முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள் - விஜய்க்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி

சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள் - விஜய்க்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி

அமைச்சர் உதயகுமார்.

அமைச்சர் உதயகுமார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள் என்று விஜய்க்கு அமைச்சர் உதயகுமார் காட்டமான அறிவுரை வழங்கியுள்ளார். 

நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், ``சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்” என்று அதிரடியாகப் பேசினார். மேலும் எல்லாரும் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம் என்றார் . உடனே விஜய் ரசிகர்களின் ஆரவாரம் அரங்கை அதிர வைத்தது. அதன்பின்னர் படத்தை படத்தை வெளியிடுவது பற்றிதான் கூறினேன் என்று விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து விஜயின் இந்த பேச்சு அனைவர் மத்தியிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது. பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும்நிலையில், அமைச்சர் உதயகுமார், சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள் என்று விஜய் பேசியதற்கு பதிலடிக்கொடுக்கும் வகையில்  காட்டமான அறிவுரை வழங்கியுள்ளார்.

ALSO READ...

"நிஜத்துல முதலமைச்சரானால்... அதில் நடிக்க மாட்டேன்": நடிகர் விஜய் அரசியல் பேச்சு!

சர்கார் தீபாவளிடா...கீர்த்தி சுரேஷ் அசத்தல் பேச்சு!

First published:

Tags: Actor vijay, Audio lunch, Minister udhayakumar, Sarkar movie, Vijay Speech in Stage