• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

மதுக் கடை

மதுக் கடை

ஊதிய உயர்வுகள் ஏப்ரல் 2019 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் இடத்தில் 7074 மேற்பார்வையாளர்கள், 15,425 விற்பனையாளர்களும் மற்றும் 3,547 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை குறித்த மானிய அறிவிப்பில் அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை விற்பனை பணியாளருக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவித்தார்.

சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, “கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில் ஈடுபட்டு மனம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்கப்படும் .

கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில்,  இந்த நிதியாண்டும் ரூ 5 கோடி மானியம்  வழங்கப்படும்.

மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியானது 2015 மற்றும்    2016-ம் நிதியாண்டிலும் 3 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லறை விற்பனைத் பணியாளருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். 2011 -ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, முறையே 500, 400 மற்றும் 300 என வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு இந்த ஊதிய உயர்வு முறையே 750, 600, 500 என உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மாத ஊதியம் 2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வுகள் ஏப்ரல் 2019 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் இடத்தில் 7074 மேற்பார்வையாளர்கள், 15,425 விற்பனையாளர்களும் மற்றும் 3,547 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 62.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி  தெரிவித்தார்.

Also watch: பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: