2021-ம் ஆண்டுக்குள் மின் அழுத்த கம்பிகள் புதைவிட கம்பிகளாக மாற்றப்படும்: அமைச்சர் உறுதி!

சென்னையில் 6,532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

news18
Updated: July 12, 2019, 11:53 AM IST
2021-ம் ஆண்டுக்குள் மின் அழுத்த கம்பிகள் புதைவிட கம்பிகளாக மாற்றப்படும்: அமைச்சர் உறுதி!
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
news18
Updated: July 12, 2019, 11:53 AM IST
2021 -ம் ஆண்டுக்குள் சென்னை முழுவதும் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகள் புதைவிட கம்பிகளாக மாற்றப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகளை புதைவிட கம்பிகளாக மாற்றும் பணி நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகவும், உயர் மின் கம்பிகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் பேசினார்.

மேலும் இந்த பணிகள் அனைத்தும் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்ற தகவல் கிடைப்பதாகவும், பருவமழை தொடங்க உள்ள நிலையில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஓராண்டுக்குள்ளாக பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, டெண்டர் விடுவதில் கால தாமதம் ஆகிவிட்டதாலும், இரவு நேரங்களில் மட்டுமே பணி செய்ய முடிவதாலும் கால தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கொளத்தூர் தொகுதியில் ஓராண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும், மற்ற பகுதிகளில் 2 ஆண்டுக்குள்ளாக பணிகள் நிறைவடையும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் பல்லாவரம் உறுப்பினர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை முழுவதும் 8 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் 6,532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...