விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது. கூட்டுறவு துறை சார்பாக சிவகாசி வட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு மூலம் 4,374 பயனாளிகளுக்கு 7.24 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் நல்ல நேரம் மிக வேகமாக வந்துள்ளது. முதல்வர் அதற்கான உரிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘பெண்கள் தங்களைத் தாங்களே சார்ந்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். தந்தை இருந்தாலும், கணவர் இருந்தாலும் மற்றொருவரை சார்ந்தில்லாமல் ஒரு பெண் தன்னைத் தானே சார்ந்தவராக இருக்கும் தற்சார்பு நிலைக்கு வந்தால் மட்டுமே பெண்களுக்கான உண்மையான விடுதலை கிடைக்கிறது.
தொழில் துறை, தகவல் தொழில் நுட்ப துறையில் இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.
நீட் விலக்கு மசோதா- மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முக்கிய தகவல்
சுய உதவிக்குழு மூலம் புதிதாக வழங்கும் கடனை தள்ளுபடி செய்வோம் என நினைக்காமல் முறையாக செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thangam Thennarasu