திராவிடக் களஞ்சியச் சர்ச்சை தேவையற்ற ஒன்று - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

Youtube Video

திராவிடக் களஞ்சியம் குறித்த சர்ச்சை தேவையற்ற ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அடையாளப்படுத்துகிறது. அதனை கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைப் போலவே தமிழ்த் தேசிய பேரியகத்தின் தலைவர் பெ.மணியரசனும் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்தநிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், ‘திராவிடக் களஞ்சியம் விவகாரம் தேவையற்ற சர்ச்சை. என்ன அறிவிப்பு வந்திருக்கிறது என்று அவர்கள் படிக்கவில்லை. என்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம் என்று முறையாக படிக்க வேண்டும், படித்துவிட்டு கருத்துக்களை கூற வேண்டும்.

    திராவிட களஞ்சியம் என்பது 150 ஆண்டுகளாக திராவிட இயக்கம், திராவிட உணவாளர்கள், திராவிட மொழிகள் சார்ந்து அவர்கள் தொடர்ச்சியாக நம் சமுதாயத்தில் எடுத்து வைத்துள்ள மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி இதையெல்லாம் குறித்து இந்தத் தளங்களில் பல ஆய்வுக் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துக்கள், கவிதைகள் இந்த பங்களிப்பினை எல்லாம் ஒன்று சேர்த்து தற்காலத்தில் இருப்பவர்கள் வரை சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் நமக்குள் இருக்கக்கூடிய மொழி தொடர்புகள், வரலாற்று இணைப்புகள் எல்லாம் விளக்கக் கூடிய வகையிலே ஒரு தொகுப்பாக திராவிட களஞ்சியம் என்ற பெயரிலே ஒரு தொகுப்பாக வருகிறது.

    சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிட களஞ்சியம் என்ற பெயரை சூட்ட தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது என்ற கூற்று அடிப்படை அற்றது. உண்மை அற்றது. அவர்கள் அறிவிப்புகளை சரியாகப் படித்து புரிந்து கொள்ளாமல் அவசரகதியில் தெரிவித்திருக்க கூடிய கருத்து.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொல்காப்பியத்திலிருந்து வரக்கூடிய செவ்வியல் இலக்கியங்களை எல்லாம் தொகுத்து அவர்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, தனியானவை, தனித்துவமானவை. எனவே இவற்றை எல்லாம் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குழப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். அப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் முயல வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: