ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக இபிஎஸ் செயல்படுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக இபிஎஸ் செயல்படுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கம் தென்னரசு

எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கம் தென்னரசு

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நிலையில், இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பதாக தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.

  அதிமுகவை கைப்பற்ற யுத்தம் நடப்பதாகவும், அது தனக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறிய அமைச்சர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவங்களை அவர் ஒதுக்கிவைத்துவிட்டதாக நினைவுகூர்ந்தார்.

  இதையும் படிங்க: 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

   ஆன்லைன் ரம்மி குறித்து சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டும், தற்போது வரை அவருக்கு நேரம் கொடுக்கவில்லை எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: EPS, Tamil Nadu Governor, Thangam Thennarasu