முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேலூர் மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க திட்டம் - தங்கம் தென்னரசு உறுதி

வேலூர் மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க திட்டம் - தங்கம் தென்னரசு உறுதி

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

2022-2023ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின்போது முதல்வரும் வேலூரில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கபடுமென கூறியதை நினைவு கூறினார் அமைச்சர் தஙம் தென்னரசு.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வேலூர் மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக பிரித்ததில் வேலூரில் இருந்த தொழிற்பூங்கா ராணிபேட்டை மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. இதனால், வேலூரில் உள்ள படித்த இளைஞர்கள் மீண்டும் வேலை கிடைக்காமல் அவதிப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

Also read... ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையத்தில் மறுவிசாரணைக்கு ஆஜரான அப்பல்லோ மருத்துவர்கள்

இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும்,2022-2023ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின்போது முதல்வரும் வேலூரில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கபடுமென கூறியதை நினைவு கூறினார் அமைச்சர் தஙம் தென்னரசு.

First published:

Tags: TN Assembly