மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

எஸ்.பி.வேலுமணி

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

 • Share this:
  மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க, அதற்கான நவீனத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்திருப்பதாக உள்ளாச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

  இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், “மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அதற்கான நவீனத் திட்டத்தையும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளதுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

  அத்துடன், தங்களது ஆட்சிக் காலத்தில் செய்த அராஜக செயல்களால் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்ததவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று விமர்சித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப திமுக தலைவர் கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

     மேலும், “எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என கண்கொத்தி பாம்பாய் அலைந்து கொண்டிருக்கும் அவர், அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களை கூட தெரிந்து கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  Must Read : புதுச்சேரியில் பாஜக-பாமக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்?

   

  மக்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பதவி வெறி பிடித்து இருக்கும் அவருக்கு இம்முறையும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று மு.க.ஸ்டானினை குற்றம் சாட்டி இருக்கிறார்.
  Published by:Suresh V
  First published: