கோவையில் பாஜக கல்வீச்சு சம்பவம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடி விசிட்!

கோவையில் பாஜக கல்வீச்சு சம்பவம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடி விசிட்!

அமைச்சர் வேலுமணொ

கோவைக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வந்த போது அவரது பின்னால் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் வாகன பேரணி நடத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் வாகன பேரணியின் போது நடந்த கல்வீச்சு சிறிய சம்பவம் எனவும் இதை ஊதி பெரிதாக்குகின்றனர் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்த நிலையில் தாக்கப்பட்ட செருப்பு கடைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று விசாரித்தார்.

கோவைக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வந்த போது அவரது பின்னால் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் வாகன பேரணி நடத்தனர். இரு சக்கர வாகன பேரணி டவுண்ஹால் பகுதிக்கு வந்த போது அங்கிருத்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு சக்கர பேரணியில் வந்த நபர்கள் அங்கிருந்த செருப்பு கடை மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், பிளாஸ்டிக் பைப்புகளையும் தூக்கி ஏறிந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் பார்த்தால் அடையாளம் தெரிய கூடிய இரு தரப்பினர் மீதும் உக்கடம் காவல் துறையினர் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளான கடைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நேரில் சென்று விசாரித்தார் பின்னர் அந்தக் கடையில் செருப்பு ஓன்றை வாங்கிக் கொண்ட கமலஹாசன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன் என உறுதியளித்து சென்றார்.

இதேபோன்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் தனித்தனியாக டவுண்ஹால் பகுதிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடம் கல் வீச்சு சம்பவம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இந்த பகுதி வியாபாரிகளுக்கு உறுதுணையாக எப்போதும் இருப்போம் என அவர்கள் உறுதியளித்து சென்றனர்.

Also read... எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள் மோடி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் திமுக வேட்பாளர்கள்!

இந்நிலையில் இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்கள் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பிய போது, கல்வீச்சு ஒரு சிறிய சம்பவம் எனவும் , இது ஊதி பெரிதாக்க படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். திமுக ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அவர்கள் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளான கடைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்றார். அவருடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான அம்மன் அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். செருப்பு கடையில் அமர்ந்து தேனீர் அருந்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் எந்தவிதமான ஜாதி, மத, பிரச்சனைகளுக்கும் அதிமுக அரசு துளியும் இடமளிக்காது எனவும், அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கல்வீச்சு குறித்து தகவல் அறிந்ததும்
சம்பவ இடத்திற்கு வந்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் வேலுமணி அந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.வாகன பேரணியின் போது நடந்த கல்வீச்சு சிறு சம்பவம் எனவும், அது ஊதிப் பெரிதாக்க படுவதாக நேற்றைய தினம் அதிமுக கூட்டணியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்த நிலையில், இன்று பா.ஜ.கவினர் கல்வீசி தாக்கிய பகுதிக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்தும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு நம்பிக்கை தெரிவித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: