குடிநீர் பிரச்னைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

news18
Updated: July 12, 2019, 3:31 PM IST
குடிநீர் பிரச்னைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
அமைச்சர் எஸ்பி வேலுமணி
news18
Updated: July 12, 2019, 3:31 PM IST
குடிநீர் பிரச்சினைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மானியக்கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. குடிநீர் பிரச்சனையின் காரணமாகவே தற்போது உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்தவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். வார்டு மறுவரையரை எல்லாம் முடிந்துவிட்டது. நீதிமன்றத்தலில் நிலுவையில் உள்ள வழக்கு தீர்ப்பு வந்தபின்பு கண்டிப்பாக நடத்துவோம் என்று கூறினார்.


மேலும், குடிநீர் பிரச்சினைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை என்று பருவ மழை பொய்து போனதும், மரம் வளர்ப்பு குறைந்துவிட்டதும் தான் குடிநீர் பிரச்னைக்கு காரணம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இதையும் அரசு சரிசெய்து கொண்டு இருக்கிறது. மழைநீர் திட்டத்தையும் அரசு செயல்படுத்தவுள்ளது. மேலும் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து வருவதாகவும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Also see...

Loading...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...