ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கின்றார், அதுதான் நடக்க போகின்றது, எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர் என கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை துவக்கி வைத்தார். பொங்கல் பரிசு பொருட்களுடன் 2500 ரூபாயும் அமைச்சர் வேலுமணி பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்திற்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.
கொரொனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர், பொங்கல் பரிசு தொகையினை 2500 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார் எனவும், பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்பு துண்டு கொடுக்கப்பட்டது, இப்போது முழு கரும்பாக கொடுக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார் எனவும், தமிழகம் முழுவதும் 2.6 கோடி குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் எனவும் இப்போது மக்களின் நெருக்கடி சூழலை கருதி 2500 ரூபாய் வழங்க முதல்வர் உத்திரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களுடன் இருந்து எடப்பாடியார் முதல்வரானவர் என்பதால் எளிமையாக இருக்கின்றார் என தெரிவித்த அவர்,
ஒரே குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு ,
குடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து தமிழக முதல்வர் மக்கள் பணியாற்றுகின்றார் எனவும், குடிசையில் போய் டீ சாப்பிட்டு வந்திருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
2500 ரூபாய் மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு கும்பல் இருக்கின்றது எனவும், எந்த தடைகள் வந்தாலும் 2500 ரூபாய் மக்களுக்கு சென்று சேரும் எனவும்,
சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கின்றேன், உங்களுக்கும் சேர்த்து இறைவனிடம் பிராத்திக்கின்றேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
Also read... Bigg boss 4 Tamil | கடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது - வெளியேறப்போவது யார்?
இதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் பொங்கல் பரிசாக
2500 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அறிவித்து துவக்கி வைத்துள்ளார் எனவும், கோவை மாவட்டத்திற்கு மட்டும் 269.83 கோடி பொங்கல் தொகுப்பிற்காக முதல்வர் ஒதுக்கியுள்ளார் எனவும் தெரிவித்தார். முதல்வர் 2500 ரூபாய் கொடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்க வில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
மேலும், கலைஞரின் மகனான மு.க. அழகிரி பேசும் போது பொய் பேச மாட்டேன் என தெரித்துள்ளார் எனவும், மு.க ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கின்றார். அதுதான் நடக்க போகின்றது எனவும், எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister sp velumani, MK Azhagiri, TN Assembly Election 2021