தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம் முடிக்கப்படும்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி!

தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம் முடிக்கப்படும்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • News18 Tamil
  • Last Updated: February 17, 2020, 11:40 AM IST
  • Share this:
ஜூன் மாதத்திற்குள் தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம் முடிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தென்காசி தொகுதி, தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடைத்  திட்டத்தினை செயல்படுத்த அரசு முன்வருமா? என அதிமுக உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தென்காசி தொகுதி, தென்காசி நகராட்சியில் கழிவு நீர் கசடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.


அப்போது பேசிய உறுப்பினர், தென்காசி தொகுதி தற்போது தலைமையகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2011-ன் கணக்கெடுப்பு படி 70,550 நபர்கள் வசித்து வந்தார்கள் என்றும், தற்போது அது இரு மடங்காக இருக்கும் என்ற காரணத்தால் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் கழிவுநீர் கசடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், ஜூன் மாதம் அந்த திட்டம் முடிக்கப்படும் என்றும், வரும் காலங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

Also see...
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading