அமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

news18
Updated: September 12, 2018, 9:47 PM IST
அமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
ஜெயராம் அறப்போர் இயக்கம்
news18
Updated: September 12, 2018, 9:47 PM IST
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரில், ரூ.800 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கோவை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட டெண்டர்களில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவியை துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனால் அவர் பதவியை ராஜினாமா வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களுக்காக விதிகளை தளர்த்தி, பல டெண்டர்களை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். கே.சி.பி இஞ்சினியர்ஸ், வரதன் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் போன்று அவருக்கு நெருக்கமான நிறுவனங்களின் லாபம், பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், போட்டியே இல்லாமல், அவர்களுக்குள்ளே டெண்டரை எடுத்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ஒராண்டு காலத்தில் விடப்பட்ட 131 டெண்டர்களில் 130 டெண்டர்கள், அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனங்கள்தான் ஏலம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் 800 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஜெயராமன் குற்றம்சாட்டினார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் தெரிவித்தார். இதேபோல், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி புகாரளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்