Home /News /tamil-nadu /

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்... கிரிப்டோகரன்சி தொடர்பான ட்வீட்களை பதிவிட்ட ஹேக்கர்கள்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்... கிரிப்டோகரன்சி தொடர்பான ட்வீட்களை பதிவிட்ட ஹேக்கர்கள்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Twitter Account Hacked: செந்தில்பாலாஜியின் பெயரை நீக்கிவிட்டு Variorius என்றும் மாற்றியுள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்ததோடு கிரிப்டோ கரண்சி தொடர்பான பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

    அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

    மேலும் அதில், அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை.கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!

    எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்” என்று ட்விட் செய்துள்ளனர்.



    செந்தில்பாலாஜியின் பெயரை நீக்கிவிட்டு Variorius என்றும் மாற்றியுள்ளனர்.  இது தொடர்பாக திமுக  எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Hacked, Senthil Balaji, Twitter

    அடுத்த செய்தி