Home /News /tamil-nadu /

நிலுவைத்தொகையும் உண்மை நிலையும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

நிலுவைத்தொகையும் உண்மை நிலையும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji | மத்திய அரசு 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க, விற்க தடை விதித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அறிவிப்பை தொடர்நது தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்கப்படாது என்று தமிழக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. மேலும் மின் தேவைக்கு ஏற்பத்தான் மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அக்டோபர் வரை மின் தேவை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

    Also Read : ஆண் பயணிகள் உஷார்! பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது - தமிழக அரசின் புதிய விதி

    இதனிடையே மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில் நிலுவைத்தொகையும் உண்மை நிலையும் என்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது.  மத்திய அரசின் ’PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.



    நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை.

    சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும் என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Senthil Balaji

    அடுத்த செய்தி