• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரிய மின் உற்பத்தி பூங்கா - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரிய மின் உற்பத்தி பூங்கா - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

மின் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைத்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை.

  • Share this:
    தமிழகத்தின் அந்தந்த மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்  சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும் இந்த ஆண்டு 4000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    கரூர் கொளந்தாகவுண்டனூரில் கடந்த  25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அண்மையில் பெய்த தொடர்  மழை காரணமாக சேதமடைந்துள்ளது. எனவே, இங்கு வசித்த  112  வீடுகளில் 33 வீடுகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இங்கு வசித்த 33 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பாக அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் உணவு பொருட்கள் மற்றும் ரூ 5 ஆயிரம்  நிவாரண உதவிகளை வழங்கிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சரிடம் பேசி இந்த 112 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பின்னர்,  செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், தமிழ் நாட்டுக்கு தேவையான மொத்த மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் ஆகும்.  இதில் 22 சதவீதம் மட்டுமே தமிழக அரசு சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதி மத்திய அரசு இடமிருந்தும்,  தனியார் நிறுவனங்களிடமிருந்து 56 சதவீதம் அளவிற்கு மின் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2006ல் திமுக ஆட்சியில் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகள் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து நிறைவேற்ற முதலமைச்சர் திட்டமிட்டு உள்ளார். அதேபோல, மின் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைத்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கவும், மின்சாரத் துறையில் புதிய கட்டமைப்பு ஏற்படுத்தி சீர் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரே ஆண்டில் 204 மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல 12 துணை மின்நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட அதிக திட்டப்பணி இதுவாகவே இருக்கும். இது போன்று கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,
    அனல் மின் நிலைய உற்பத்தி என்பது கடந்த  2006 - 11ல்  85 சதவீதமாக இருந்து.

    இது 2011 - 16 ல் 78 ஆக மாறியது. 2020-21ல்  மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து 43 சதவீதமாக சராசரி உற்பத்தி திறன்  குறைந்து விட்டது. இதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் தற்போது 85 சதவீதம் முதல் 90 சதவீதம் மின் உற்பத்தி செய்து வருகின்றன. ஏன் அரசால் செய்ய முடியாது? எனவே அதற்கான கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அனல் மின் நிலையத்திற்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து நிலக்கரி வாங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒடிசாவில் இருந்து வாங்கி உற்பத்தி செய்வதை மாற்றி அவர்களிடமே நிலக்கரி கொடுத்து உற்பத்தி செய்து தமிழகத்திற்கு மின் உற்பத்தி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மிச்சம் ஆகியது.

    கரூர் மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி, சந்துக் கடைகள் முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    சூரிய மின் உற்பத்தி பொருத்தவரை அந்தந்த மாவட்ட மக்களின் தேவைக்கு ஏற்ப சூரிய மின் உற்பத்தி செய்துகொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரியனின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது.  இந்த ஆண்டு 4000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Must Read : குழந்தைகளுக்கு அதிகரிக்கும் டெங்கு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

    மின் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைத்து, அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து, மின்சாரத் துறையில் புதிய கட்டமைப்பு ஏற்படுத்தி சீர் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறினார் செந்தில் பாலாஜி.

    தி.கார்த்திகேயன் - செய்தியாளர், கரூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: