ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த மாதம் முதல் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில், மின்வாரிய அதிகாரிகளையே விசாரிக்க வேண்டியுள்ளதால் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அடுத்த மாதம் முதல் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த ஆண்டு முதலமைச்சர் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து அது தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். வரக்கூறிய மாதங்களில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இத்திட்டம் தொடங்கும் என தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,  'லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் டன் நிலக்கரி கடந்த ஆட்சி காலத்தில் காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.

    அதன் அடிப்படையில் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’ என கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்க காரணம் குறித்த கேள்விக்கு, ‘மின்வாரியத்தில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதால் எனவே மின் வாரியத்திலேயே புகார் அளிப்பது சரியாக இருக்காது. எனவே லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி

    மேலும், ‘ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும். அதேபோல் மின் நுகர்வோர் விவரமும் நம்மிடம் இருக்கும் கடந்த ஆட்சியில் ஒரு கோடியே 15 லட்சம் தொலைபேசி எண்கள் மட்டுமே நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.தற்போது மூன்று கோடி நுகர்வோர்களின் எண் நம்மிடம் உள்ளது விரைவில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மின் இழப்பீட்டை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Electricity, Farmers, Senthil Balaji