Home /News /tamil-nadu /

இரண்டுமுறை கேட்டும் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சீமான் தெரிவிக்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

இரண்டுமுறை கேட்டும் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சீமான் தெரிவிக்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

சீமான், செந்தில் பாலாஜி

சீமான், செந்தில் பாலாஜி

சீமான் வீட்டின் மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேள்வி எழுப்பியும் பதிலளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 6,220 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தற்போது இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்னகம் மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதில் 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விட்ட பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழகத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிக அளவில் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக செலவை குறைக்கும் வகையில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகைகளில் கிடைக்கப்பெறும் மின்உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் ஈழத்தமிழருக்கு நினைவேந்தல் நடத்திய திருமுருகன், வன்னியரசு உள்ளிட்ட 500 பேர் கைது

    சீமான் வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். இதுவரை பதில் அளிக்கவில்லை. மின் இணைப்பு எண் என்ன என்று சீமான் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி 4,320 மெகாவாட்டாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி கூடுதலாக 6,220 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Seeman, Senthil Balaji

    அடுத்த செய்தி