ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'ஆட்சி முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும்' - அமைச்சர் செந்தில்பாலாஜி

'ஆட்சி முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும்' - அமைச்சர் செந்தில்பாலாஜி


அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

TN Power Cut | தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  5 ஆண்டுகாலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையம் மின்னகம், மாநில மின் பகிர்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோடை காலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கென 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது.

  இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு தினசரி வழங்க வேண்டிய நிலக்கரியை போதிய அளவு வழங்கவில்லை. இதனால் தமிழகத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும்.

  இதையும் படியுங்கள் | 'திமுக அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஊழல் செய்கின்றது' - பாஜக தலைவர் அண்ணாமலை

  குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு தொழிற்சாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அதுபோன்ற சூழல் ஏற்படவில்லை. தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 சதவீத மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகாலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும் எனத் தெரிவித்துள்ளார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Power cut, Powercut, Senthil Balaji