மாதாமாதம் ரீடிங் எடுங்க... பில் கட்ட கஷ்டமா இருக்குன்னு சொன்ன தங்கர் பச்சான் வீட்டுக்கு படையெடுத்த மின்சார அதிகாரிகள்...

தங்கர் பச்சான்

தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்த சிலமணி நேரத்திலேயே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மின்சாரத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேரில் சென்றனர்.

 • Share this:
  திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி மாதா மாதம் மின் பயன்பாட்டை அளவெடுக்க வேண்டும் என தங்கர்பச்சான் கோரிக்கை வைத்த நிலையில், அவரதுக்கு வீட்டுக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் நேரில் சென்று விளக்கமளித்தனர்.

  திரைப்பட இயக்குநரும்  ஒளிப்பதிவாளரும் நடிகருமான தங்கர் பச்சான் மின்கட்டணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,  அரசு ஊழியர்கள் மாதாமாதம் ஊதியம் பெறும் நிலையில், மின்சாரக் கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் தன் வீட்டுக்கு கட்டணமாக  ரூ. 16 ஆயிரம் மட்டுமே  செலுத்த வேண்டியிருக்கு என்றும் தற்போது ரூ. 36 ஆயிரத்தை மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும், இது இரண்டேகால் மடங்கு அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க: தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, தூய்மைக் குடிநீர்  திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டில் முடியாதா என்ன: ராமதாஸ்


  ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை என்றும் தங்கர்பச்சன் கூறியிருந்தார்.

  தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்த சிலமணி நேரத்திலேயே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மின்சாரத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேரில் சென்றனர்.  அவர்களிடம் தனது கோரிக்கை மின் கணக்குத் தொடர்பானது அல்ல என்றும்தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் அளித்திருந்தபடி, தற்போதுள்ள இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி மாதம் ஒருமுறை செலுத்தும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் தங்கர்பச்சான்  விளக்கமளித்தார்.

  இதையும் படிங்க: மேகதாது பிரச்சினை முடிந்துவிட்டது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


  இது தொடர்பாக தங்கர்பச்சான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  ‘மின்துறை அமைச்சருக்கு எட்டிய செய்தி முதலமைச்சரின் பார்வைக்கும் சென்று சேர்ந்திருக்கும் என நம்புகின்றேன். மின் கட்டண சுமையால் இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே என்னைப்போன்றே முதலமைச்சரின் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்' என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Murugesh M
  First published: