மாதந்தோறும் மின் கணக்கீடு... அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கணக்கீட்டில் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம் என்றும், மின் கணக்கீடு தொடர்பான புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 • Share this:
  அனைத்து மின் பகிர்மான மாவட்ட தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், வட்டார பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இயக்குனர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் 40 நாட்களில் மின்சார வாரிய தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள், உயர்மட்ட மின் பாதையை குறைத்து புதைவிட பாதையாக மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  Also read: தமிழ்நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் போது, திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது போன்ற பிம்பத்தை எதிர்கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை சார்ந்த பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன.

  அதிமுக ஆட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பாதிப்படைந்து குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள்3 அல்லது 4 மாதங்களுக்குள் சரி செய்யப்படும்.

  இலவச மின்சார இணைப்புக்கு 4.50 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருந்து வருகின்றனர். அந்த விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. அதேபோன்று மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும். மின் கட்டணம் செலுத்த 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  3ல் ஒரு பங்கு மின்சாரத்தை நாம் கொள்முதல் செய்து வரும் நிலையில், நமக்கான உற்பத்தியை நாமே செய்து கொள்ள வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.

  மின் கணக்கீட்டில் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம் என்றும், மின் கணக்கீடு தொடர்பான புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: