• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 4 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது - தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

4 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது - தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் நான்கு நாள்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    அனல் மின் நிலையங்களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 60 ஆயிரம் டன் வரவழைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் வெளியாகின. இந்திய அளவிலேயே நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. அதன் காரணமாக, மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்திகள் வருகின்றன.

    இந்தநிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘1,800 மெகாவாட் அளவுக்கு தான் கடந்த ஆட்சியில் உற்பத்தி மின்சாரம் செய்யப்பட்டது. தனியாரிடம் கொள்முதல் செய்வதற்காக சொந்த உற்பத்தி அளவை குறைத்து பராமரிப்பு என்ற பெயரில் செய்துள்ளனர். 4 நாட்கள் வரை நிலக்கரி இருப்பு இருக்கிறது. தேவையான அளவு இருப்பு வந்து கொண்டிருக்கிறது.

    எப்போதும் 6 நாட்களுக்கு இருப்பு வைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 4 நாட்கள் இருப்பு தான் உள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரம் மெகாவாட் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. 4,000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2006 - 11 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களை ஏறத்தாழ 6,000 மெகாவாட் அளவிற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கிறது.

    அதனை மீண்டும் மறு ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருந்தால் அந்த திட்டத்தை நிறைவேற்றப்படும். ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்கக்கூடாது. சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு உத்தரவு. குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் வருடத்திற்கு 16,000 கோடி ரூபாய் வட்டி மட்டும் செலுத்துகிறோம். 216 துணை மின் நிலையங்கள் அமைக்க கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

    பருவமழை, புயல் மழை காலங்களாக இருக்கிறது. இதை எதிர்கொள்வதற்காக ஒரு லட்சம் மின் கம்பங்கள் உள்பட அனைத்து தளவாட சாமான்கள் தயாராக இருக்கிறது. தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் மின்சாரம் கிடைக்கும். நிலக்கரி பற்றாக்குறை குறித்து சீரான முறையில் கிடைப்பதற்கு மத்திய அரசு முழுமையாக நிலக்கரி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: