ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் மயிலாப்பூரில் நடைபெறும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாமை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தினங்களிலும் பிரிவு அலுவலங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவசங்கள் ரத்தாகி விடும் என வதந்தி பரவி வருகிறது. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் உள்ளிட்ட மின் இணைப்புக்கான அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.
ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணை ஏன் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எவ்வளவு பேர் சொந்த வீட்டில் உள்ளார்கள், எவ்வளவு பேர் வாடகை வீட்டில் உள்ளார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது உள்ளிட்ட எந்த வித தரவுகளும் மின்வாரியத்தில் இல்லை.
மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், நவீனமயமாக்கவேண்டும் என்பதற்காகவே மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க கூடிய பணிகள் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ALSO READ | ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம்
ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 3 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, அவருக்கு ஏற்கனவே வழங்கப்படுகிற 100 யூனிட் இலவசம் தொடர்ந்து வழங்கப்படும். ஒரே ஆதார் எண்ணில் 10 இணைப்பு கூட இணைத்து கொள்ளலாம் என கூறினார்.
இந்த மாதமும், டிசம்பர் மாதமும் மின் கட்டணம் செலுத்துவதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் பெயரில் இருந்தால் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மின் இணைப்பு பெயரில் உள்ளவர்கள் உயிரிழந்திருந்தால் இந்த முகாமை பயன்படுத்தி உரிய ஆவணங்களை வழங்கி பெயரை மாற்றி கொண்டு ஆதாரை இணைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கும், எனவே அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் உள்ளது என்றும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Aadhar, Senthil Balaji