ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலை வாட்ச் ரூ. 5 லட்சம்.. ரசீதை வெளியிட தயாரா? சவால் விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

அண்ணாமலை வாட்ச் ரூ. 5 லட்சம்.. ரசீதை வெளியிட தயாரா? சவால் விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? - செந்தில் பாலாஜி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் சுமார் ரூ. 5 லட்சம்  மதிப்பிலான கைக்கடிகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார்.

இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியுமா? எனவும் அவர் கேட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, Rafale fighter jet, Senthil Balaji