Home /News /tamil-nadu /

வேலையில்லாதவர்கள் பற்றி பேசவேண்டாம்- அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

வேலையில்லாதவர்கள் பற்றி பேசவேண்டாம்- அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அண்ணாமலை, செந்தில் பாலாஜி

அண்ணாமலை, செந்தில் பாலாஜி

வேலையில்லாதவர்கள் குறித்து பேசவேண்டாம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசின் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் தமிழக மின்சார வாரியத்துக்கு 2,200 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘முதல்வர் தொடர்ந்து மின் வாரிய துறையுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி வட்டி குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் செய்ததால் தமிழக மின்சார வாரியத்துக்கு 2,200 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் செலவை குறைக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 98,157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் இரு தினங்களில் மின் இணைப்பு அளிக்கப்பட்டுவிடும். 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் 100 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கோடைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. மத்திய அரசு 50,000 டன் நிலக்கரி மட்டுமே தரும் நிலையில் முதற்கட்டமாக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

நிலக்கரி விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில் , வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கடந்த 2006 - 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலைய திட்டபணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து உற்பத்தியை தொடங்கும். செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய கூடிய நிலக்கரியில் ஊழல் இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை வேலையில்லாமல் தன் இருப்பை காட்டி கொள்ள பேசி வருகிறார்.

வேலையில்லாதவர்களை பற்றியோ, ஆதாரம் இல்லாமல் குற்றம்சுமத்துபவர்கள் பற்றியோ பேச வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் வார நாளிதழ்கள் மூலம் தங்கள் இருப்பை காட்டி கொள்ள ஆதரமில்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் விமரசித்தார்.

அதிகப்பட்சமாக இன்று 17,000 மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்ததாகவும் எனினும் வரும் கோடைகாலத்தை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பல போராட்டங்களுக்குப் பிறகு செவிலியர் படிப்பு: தற்போது அரசுப் பணி- திருநங்கை தமிழ்ச்செல்வியின் சாதனைப் பயணம்

ஒரு பொதுவான நல்ல நோக்கிற்காக வேலை நிறுத்தம் நடைபெருவதாகவும் தமிழக மின்சாரத்துறையை பொறுத்தவரை  வேலை நிறுத்தால் மின் உற்பத்தி எதுவும் பாதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சூரிய மின் சக்தி நிலையங்களை உருவாக்க அரசு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும் தெரிவித்தார். பழுது நீக்க செல்லும் மின் வாரிய ஊழியர்கள் நுகர்வோரிடத்தில் எதையும் கேட்க கூடாது என மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. மீறினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Annamalai, Senthil Balaji

அடுத்த செய்தி