தமிழகத்தில் மின்தடை இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ‘கடந்த ஆட்சியில் நிர்வாக கோளாறுகளால் மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த அட்டவனை தயாராகிவருகிறது. தமிழக அரசின் மீது குற்றம் சுமத்த பூதக்கண்ணாடி வைத்து தேடிவருகிறார்கள். மின்தடை ஏற்படுகிறது என பொத்தாம் பொதுவாக குற்றம் செலுத்தாமல் எங்கு மின்தடை ஏற்படுகிறது என்பதை தெரியபடுத்தினால் உடனடியாக சரிசெய்யப்படும். மின்வாரியம் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  மின்கணக்கிட்டாளர் கூடுதல் கட்டணம் பெருவதை போல் கணக்கிட்டிருந்தால் மின்கணக்கிட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது. கடந்த 19-ம் தேதி தொடங்கிய மின் பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிந்துள்ளன. இனி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2,04,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் 2,08,000 விவசாயிகளுக்கு மட்டும இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கே மின் இணைப்பு கொடுக்காமல் மின் மிகை மாநிலம் என கூறிவந்துள்ளது அ.தி.மு.க’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: