Home /News /tamil-nadu /

மின் இணைப்புக்கு ஆதார் கட்டாயமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் இணைப்புக்கு ஆதார் கட்டாயமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Senthil Balaji : தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு உட்பட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அதே வேளையில் ஒரு விவசாயிக்கு 3, 4 இடங்களில் நிலங்கள் இருந்தாலும் அவர்களுக்கு மின் இணைப்பு கொடுப்பதில்  ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடரும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் 96 விழுக்காடு வெற்றி பெற்று இருக்கின்றோம் எனவும், இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை எனக்கூறிய அவர், கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், இன்றைய உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பில் அந்தந்த வார்டுகளில்  உள்ள பொதுவான பிரச்சினைகள் தயாரிக்க சொல்லி இருக்கின்றோம் எனவும்அடுத்த 5 ஆண்டுகளுக்கான பணிகளை தயாரித்து, அந்த பட்டியலை முதல்வரிடம் கொடுத்து சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளபடும் எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு  திட்டங்களுக்கு வரப்பட்ட நிதி வகை மாற்றம்  செய்யப்பட்டுள்ளது எனவும் இது குறித்து  விசாரணையானது நடைபெற்று வருகின்றது எனவும், விசாரணை முடிவில் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது என தெரிவித்த அவர், கோவைக்கு  வித்தியாசம் பார்க்காமல் தமிழக முதல்வர் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள்  இந்த வெற்றியை கொடுத்து இருப்பதகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என தெரிவித்த அவர், இதில் நல்ல தீர்ப்பு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Also Read : எனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டுள்ளனர்... உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது... அதிபர் செலன்ஸ்கி வேதனை

சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்க மேற்கொள்ளும் பணிகள் முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது, கோவையில் மேயர் பதவி  கேட்பவர்கள் கடிதம் கொடுத்து வருகின்றனர் எனவும் அது தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.
மின் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டு வர திட்டமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் மற்றும் விநியோகத்திற்கான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், திமுக அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான மின்தேவையை கணக்கிட்டு உற்பத்திக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Read More : அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்... மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர்

மாவட்டம் தோறும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், திருவாரூர் மாவட்டத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது எனவும் தெரிவித்தார். மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு உட்பட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்த அவர், மின் வாரியத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து  நடைபெறுகின்றது வருகின்றது எனவும், ஓரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8,905 மின்மாற்றி அமைக்கும் பணி அடுத்த 15 நாட்களில் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

Must Read : திமுக ஆட்சி... பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரு விவசாயிக்கு 3, 4 இடங்களில் நிலங்கள் இருந்தாலும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில்  ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடரும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்வாரியத்தின் பணிகளை பார்த்து நிறைய விவசாயிகள் அதிர்ச்சி ஆகியிருக்கின்றனர் எனவும் இலவச இணைப்பு வராது என விவசாயிகள் நம்பிக்கை இழந்து இருந்தாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் இப்போது அவர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் சொல்ல வில்லை. சில அதிமுகவினர் மட்டுமே சொல்கின்றனர் எனக்கூறிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை இனி தளபதியின் கோட்டை, இனி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற  தேர்தல்களில் மக்கள் அதை உணர்த்துவார்கள் எனவும்  தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Aadhar, Senthil Balaji

அடுத்த செய்தி