• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக தயார்... அமைச்சர் செங்கோட்டையன்...!

எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக தயார்... அமைச்சர் செங்கோட்டையன்...!

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுகவுக்கு அச்சமே இல்லை எனவும், எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவரிடம், பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஒவ்வொருவம் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவுக்கு யாரைக் கண்டும் அச்சமில்லை. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத்தேர்தல் என அனைத்திலும் அதிமுக தான் வெற்றிப் பெறும் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கனமழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: