• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்க தமிழ்ச்செல்வன் கனவு கானல் நீர் போல மறைந்துவிடும்: அமைச்சர் விமர்சனம்!

தங்க தமிழ்ச்செல்வன் கனவு கானல் நீர் போல மறைந்துவிடும்: அமைச்சர் விமர்சனம்!

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தங்கதமிழ்ச்செல்வன் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு சாலையில் வரும் கானல் நீர் போல மறைந்துவிடும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தங்க தமிழ்ச்செல்வன் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு சாலையில் வரும் கானல் நீர் போன்றது என்று திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு பதிலளித்தார்.

Also read... திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி!

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வி ஆண்டில் கல்விக்காக புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், ரோபோ மூலம் பள்ளியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: