மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுக-வில் இணையவுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன்
கே.ஏ.கே.செல்வம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 6:52 PM IST
  • Share this:
அதிமுகவின் மூத்த உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் உடன்பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பன் மகன் கே.ஏ.கே.செல்வம் இன்று மாலை 7 மணிக்கு திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

Also read: கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு உறுதிஇதற்காக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஏற்பாட்டில் இன்று சென்னை வந்துள்ள செல்வம், 7 மணி அளவில் திமுகவில் அதிகாரபூர்வமாக தன்னை இணைத்துக் கொள்கிறார். இவர் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


ஆளும் அதிமுக அரசில் மூத்த அமைச்சராக உள்ள கே.ஏ.செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் மகனே திமுகவில் இணைய உள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading