தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும், நடைமுறைச் சிக்கல்கள் சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும், நடைமுறைச் சிக்கல்கள் சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இல்லாமல், தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இல்லாமல், தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கல்வியாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப நடைமுறை சிக்கல்கள் சரிசெய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திவரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அதே பாணியில் ஜூலை 13-க்குப் பிறகு பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்த 5 சேனல்கள் இலவச சேவை வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
கிராமப்புற மாணவர்களிடம் ஆன்லைன் கல்வியை கொண்டு சேர்க்கும் நடைமுறை சிக்கலால், தொலைக்காட்சிகள் வாயிலாக மட்டுமே, சிந்தனையும், செயலும் சேர்ந்த கற்றல் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென கல்வியாளர்களும், மாணவர்களும் கோரியிருந்தனர். இது தொடர்பான செய்தித் தொகுப்பும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என விளக்கமளித்தார். 18 பேர் கொண்ட குழு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தொலைக்காட்சி வாயிலான இந்த தற்காலிக கல்வி முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, கணிதம், அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி, பொதிகை மற்றும் சில தனியார் சேனல்களில், வகுப்புகள் வாரியாக பாடம் நடத்த நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கிவைக்க உள்ளார். ஆனால் இதற்கு சரியான திட்டமிடல் முக்கியம் என்கிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா..
தொலைக்காட்சி வாயிலான கல்வி திட்டம் தொடங்கப்பட்ட பின்னரும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வியாளர்களின் அறிவுரைகளுக்கு ஏற்ப மாறுதல்களை செய்ய அரசு தயாராகவே உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.