மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது - செங்கோட்டையன்

news18
Updated: May 16, 2018, 3:04 PM IST
மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது - செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
news18
Updated: May 16, 2018, 3:04 PM IST
பிளஸ்-2 தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் எடுத்த மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 91.1சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பற்றிய முழு தகவல்களயும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஒவ்வோரு வருடமும் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை வைத்து அந்தந்த பள்ளிகள் முதல் மதிப்பெண் பெற்ற  மாணவர்களின் புகைப்படத்துடன் விளம்பர பலகைகளை வைத்து தங்களுக்கான விளம்பரத்தை தேடிக்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் புகைப்படங்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் போட்டி சம்பந்தப்பட்ட தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 2 தேர்வில் சில கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்