ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கால நீட்டிப்பு மீண்டும் வழங்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
  • News18
  • Last Updated: September 1, 2020, 1:30 PM IST
  • Share this:
1 முதல் 8-ம் வகுப்பிற்கு ஆசிரியர் பணிக்கு செல்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு TET கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.

அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு  கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதனையடுத்து 2013, 2014, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலக்கெடு என்பது ஏழு ஆண்டுகள் ஆகும்.

Also read... கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 118 அவசர ஊர்திகள் - தொடங்கி வைத்த முதல்வர்


அதன்படி 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்தது.  இவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 94,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 14,000 பேர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. மீதமிருக்கும் 80,000 நபர்களுக்கு பணி வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading