• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகள் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகள் - செங்கோட்டையன்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும் மற்றும் விலையில்லா 14 பொருட்கள் விரைவில் வழக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் துவங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகள் ஜனவரி மாதத்திற்கு மேல் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று துவங்கப்படும் என்று கூறினார்.

ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும் மற்றும் விலையில்லா 14 பொருட்கள் விரைவில் மாணவ மாணவிகளுக்கு வழக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வார காலம் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வு பயிற்சிகளுக்காக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் நீட் தேர்வில் எந்த ஒரு தங்கு தடையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: