• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தோல்வியே கிடையாது; நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறுவார்கள் - 5 & 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து செங்கோட்டையன் பேட்டி

தோல்வியே கிடையாது; நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறுவார்கள் - 5 & 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து செங்கோட்டையன் பேட்டி

அமைச்சர் செங்கோட்டையன்  (கோப்பு படம்)

அமைச்சர் செங்கோட்டையன் (கோப்பு படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு உத்தரவின்படி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கல்வி திறன் எப்படி இருக்கிறது என்பதை கண்டறியவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறுவார்கள், தோல்வியே கிடையாது என்பதால் அச்சப்படத் தேவையில்லை. தனியார் பள்ளிகளில் எல்கேஜி சேரும் குழந்தைகளுக்கே நுழைவுத்தேர்வு வைக்கப்படுகிறது. எனவே நல்ல கல்வியை கொடுப்பதற்காகவே பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    பொங்கல் விடுமுறை உள்ளாட்சித் தேர்தல் போன்ற காரணங்களால் நீட் பயிற்சி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது நீட் தேர்வு பயிற்சி நீட்டாக சென்று கொண்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: