பள்ளி மாணவர்கள் சாதிக்கயிறு அணியும் விவகாரம்! செங்கோட்டையன் பதிலால் எழுந்த சர்ச்சை

சாதிக்கயிறுகள் கட்டக்கூடாது என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு> அதுபற்றி தனது கவனத்திற்கு எந்த செய்தியும் வரவில்லை என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: August 15, 2019, 10:20 PM IST
பள்ளி மாணவர்கள் சாதிக்கயிறு அணியும் விவகாரம்! செங்கோட்டையன் பதிலால் எழுந்த சர்ச்சை
அமைச்சர் செங்கோட்டையன் (கோப்பு படம்)
Web Desk | news18
Updated: August 15, 2019, 10:20 PM IST
மாணவர்கள் சாதிக்கயிறுகளை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது. பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் சாதியைக் குறிக்கும் வகையில், மாணவர்கள் வண்ணக்கயிறுகள் கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 12-ம் தேதி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது

இதற்கு தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.


இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும், 80 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வண்ணக்கயிறுகளை அணிந்து வருவது தெரியவந்தது. குறிப்பாக, மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் என பல்வேறு வண்ணங்களில், ஒவ்வொரு சாதியின் அடையாளமாக அவர்கள் அணிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டக்கூடாது என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமல் வெளிவந்துள்ளது.

Loading...

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அத்துறையின் அமைச்சரே தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், பழைய நடைமுறையே தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டும் நடைமுறையே தொடரும் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டது பற்றி, தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் சாதிகளை ஒழிக்க பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கயிறு கட்டத் தடை விதிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தான், பள்ளி மாணவர்களின் மத அடையாளங்களுக்கு ஆட்சேபனை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டும் நடைமுறையே தொடரும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பதற்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார். அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில் அமைச்சரின் குறுக்கீடு இருப்பது அழகல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

சாதிக்கயிறுகள் கட்டக்கூடாது என்ற உத்தரவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், அதே உத்தரவை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருக்கிறார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி, ட்விட்டரில் பதிவிட்ட தகவலை, அவர் மறுபதிவு செய்து வெளியிட்டார். அமைச்சரின் இருவேறு நிலைப்பாட்டால், மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டலாமா அல்லது கட்டக்கூடாதா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

Also Watch

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...