துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரைத் தவிர்த்த அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தால் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரைத் தவிர்த்த அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
  • Share this:
சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டுக்குச் சென்று ஆதரவாளர்கள் சந்தித்துவந்தனர். முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் முன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடவில்லை.


வழக்கமாக எப்போதும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் ஆட்சி என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை மட்டும் குறிப்பிட்ட செங்கோட்டையன் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை தவிர்த்துவிட்டார்.
First published: October 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading