திமுக எம்எல்ஏ அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து- அமைச்சர் செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி

திமுக எம்எல்ஏ அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து- அமைச்சர் செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி
அமைச்சர் செல்லூர் ராஜு (கோப்புப் படம்)
  • Share this:
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் அதிகமாக அன்பழகன் விமர்சித்திருந்தாலும், அவருக்கு உடல்நலம் குன்றியிருக்கும் இச்சமயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ள மாட்டோம் என்று கூறினார்.

மேலும், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பது தான் தங்களுடைய ஒரே நோக்கம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

Also read... மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரிப்புAlso see...
First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading