Home » News » Tamil-nadu » MINISTER SELLUR RAJU WHO HAS RECOVERED FROM CORONA HAS GIVEN AN EXCLUSIVE INTERVIEW TO NEWS18 TAMIL NADU VIN STA

அரசியல் பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல காரணம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு பிரத்யேக பேட்டி

வாழ்க்கையில் ஒருமுறைதான் சாவு வரும் என்று கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜு நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல காரணம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு பிரத்யேக பேட்டி
அமைச்சர் செல்லூர் ராஜு (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: July 21, 2020, 1:37 PM IST
  • Share this:
கொரோனா சிகிச்சை முடிந்து தற்போதுவீடு திரும்பி இருக்கும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கொரோனா பாதிப்பு முதல் மீண்டு வந்தது பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

கேள்வி: கொரோனா தீவிரமாக இருந்ததை அறிந்தும் என்ன மனநிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகினீர்கள்?

பொது வாழ்க்கையில் வந்து விட்டால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களுக்கு உதவ வேண்டும். தலைவன் என்பவன் பதவியில் மட்டும் இருக்கக்கூடாது ஓடி ஓடி உழைக்க வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளுடன் தான் செயல்பட்டேன். ஆனால் வாழ்க்கையில் இதையெல்லாம் சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு முறை தான் சாகப்போகிறோம்; அது நல்லதற்காக இருக்கட்டும்.


கேள்வி: கொரோனா பாசிட்டிவ் என வந்த பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பாசிடிவ் என வந்த பொழுது அதைக் கண்டு அஞ்சவில்லை. தைரியமாக தான் இருந்தேன். நம்மால் நம் குடும்பத்தினருக்கு  வந்துவிட்டது என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை. நான் பதவியில் இருக்கும் பொழுது அந்த பதவி சுகத்தை என் குழந்தைகளும் என் குடும்பத்தாரும் அனுபவிக்கிறார்கள்.

கேள்வி: சிகிச்சை காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்?மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அவர்கள் வழங்கிய மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டேன். எனக்கு பெரிய அளவிலான அறிகுறிகள் இல்லை. 6 முறை நான் சோதனை எடுத்த பொழுது எனக்கு தொற்று இல்லை என்று தான் வந்தது. என் மனைவி குணமடைந்த பிறகு அவரை மதுரை அழைத்துச் செல்வதற்காக ஏழாவது முறையாக எனக்கு பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் ஒன்பது நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். தற்பொழுது 4 நாட்கள் வீட்டில் இருக்கிறேன். 10 நாள் கழித்து மீண்டும் பொது பணிக்கு வருவேன்.

கேள்வி: சிகிச்சையில் இருந்த பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததாக தகவல் வந்தது என்ன கூறினார்?

சிகிச்சையில் இருந்த பொழுது தலைவர்கள் பலரும் என்னை நலம் விசாரித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் என்னை நலம் விசாரித்தது தமிழர் பண்பு சார்ந்த விஷயம். திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு அந்தப் பண்பு இருக்கும்.

நானும் அந்த திராவிட இயக்கத்தின் ஒரு தொண்டன். உன்னை பார்த்து கொரோனா ஓடி விடுமே... உன்னிடமே வந்து விட்டதா... என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் என்னிடம் கேட்டார்.

மதுரையில் நான் குணம் பெற்று வர வேண்டி பலரும் வழிபாடு நடத்தி போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். இது ஒன்று போதும் .அவர்களின் மனதில் இடம் பெற்று இருக்கிறோம் என்கிற மனநிறைவு எனக்கு போதும்.

கேள்வி: அரசியல் பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல காரணம் என்ன?

பிரபலங்கள் பெரும்பாலும் பிரைவசியை எதிர்பார்க்கிறார்கள். முதலில் என் மனைவிக்கு தொற்று ஏற்பட்டது. அவர் பெண் என்பதால் அந்த பிரைவசிக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றேன்.

பின்னர் எனக்கும் தொற்று உறுதியானதால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தனியார் மருத்துவமனையில் இருந்தாலும் அரசு மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டுக்கொண்டிருந்தேன்.கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.





தனியாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் ஒரே மருத்துவம் தான். தனியாரில் குறைந்த அளவு நோயாளிகள் இருப்பார்கள். அரசு மருத்துவமனையில் அதிக நோயாளிகள் இருப்பார்கள். அமைச்சர் என்கிற முறையில் நான் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் என்னை மட்டும் கவனிக்கிறார்கள் என்கிற விமர்சனம் ஏற்படலாம். அதனால்தான் தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading