• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேசன் கடை ஊழியர்களுக்கு சீருடை - அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேசன் கடை ஊழியர்களுக்கு சீருடை - அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜு.

அமைச்சர் செல்லூர் ராஜு.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

  • Share this:
    ரேஷன் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்பியதை தொடர்ந்து, படகு சவாரி சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினர் பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்குவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றார். அந்தந்த ரேசன் கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கி வருவதாகவும், அவர்களுக்கு புதியதாக சீருடை வழங்க இருப்பதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற ஜனவரி 21-ம் தேதி கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: